தமிழ்நாட்டில் உள்ள புண்ணிய தலங்களில் மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரசித்திபெற்ற ஒன்றாகும். இந்தக் கோவயிலுக்கு சொந்தமாக மதுரை மாவட்டம் முழுவதிலும் கடைகள் உட்பட ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதில் ஒரு சில இடங்களில் உள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலின் 70 கோடி ரூபாய் சொத்துகள் மீட்பு! - மீனாட்சியம்மன் கோயிலின் சொத்துக்கள் மீட்பு
மதுரை: நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 70 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
மதுரை தெற்குவாசல் அடுத்த ஒண்டிமுத்து மேஸ்திரி தெருவில் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வீடுகள், கடைகள், திரையரங்குகள் போன்ற ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளன. அதனை மீட்கக்கோரி கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாக அலுவலர் நடராஜன் தலைமையில், காவல்துறையின் ஒத்துழைப்போடு கோயிலுக்குச் சொந்தமான 70 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.