மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தூத்துகுடி மாவட்டம், நகர் சங்கர இராமேசுவரர், வைகுண்டபதி பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முறையான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு முன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். எனவே, கோயிலுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்து்களுக்கும் சார்நிலைக் கருவூல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுவந்த அலுவலர்கள் மீது உரிய குற்றவியல் வழக்குப்பதிவு செய்து விரிவான புகாரினை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் காவல் துறையில் வழங்கப்பட உத்தவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்தக் கோயில் நிலத்தை மீட்பது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.