தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணம் செய்வதாக கூறி சிறுமி கடத்தல் - இளைஞர் கைது! - 15 year old girl

ஈரோடு: இளைஞருடன் சென்ற 15 வயது சிறுமியை காவலர்கள் ஏழு மாதங்களுக்கு பிறகு மீட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பாலியல் வன்கொடுமை 15 வயது சிறுமி இளைஞர் கைது போக்சோ சட்டம் Pocso act Erode district Sexual harassment 15 year old girl Youngster arrest
ஈரோடு மாவட்டம் பாலியல் வன்கொடுமை 15 வயது சிறுமி இளைஞர் கைது போக்சோ சட்டம் Pocso act Erode district Sexual harassment 15 year old girl Youngster arrest

By

Published : Aug 22, 2020, 4:48 PM IST

Updated : Aug 22, 2020, 7:02 PM IST

ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி நேதாஜி வீதிப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றியபடி இரண்டு மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயலட்சுமி தனது 15 வயது மூத்த மகள் வீட்டில் இல்லாமல் போனதால், அதே பகுதியிலுள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி விடுவார் என்று காத்திருந்தார்.

ஆனால் மாலை நேரம் கழிந்தும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் தனது இளைய மகளுடன் நேரடியாக சென்று விசாரித்துள்ளார். அப்போது, மூத்த மகள் அங்கு செல்லைவில்லை என்பது உறுதியானது. அதன்பின்னர் அவரை தோழிகளின் வீட்டில் தேடினார். அங்கும் காணவில்லை.

இந்நிலையில், அடுத்த நாள் தனது தாயாரை தொடர்பு கொண்ட அந்தச் சிறுமி, தன்னை இளவரசன் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்ற ஜெயலட்சுமி காணாமல் போன தனது மகளைத் தேடி தர வேண்டுமென்று புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஏழு மாதங்கள் கழித்து தற்போது கடத்திச் சென்ற பெண்ணுடன் அந்த இளைஞர் பல்லடத்தில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து விரைந்து சென்று அங்கிருந்த இளைஞரைக் கைது செய்த காவலர்கள் சிறுமியை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து சிறுமி, சிறுமியர் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். இந்தச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டம் திருவடைமருதூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பதும், பணி நிமித்தமாக ஈரோடு வந்த போது சிறுமியைப் பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பல்லடத்திற்கு கடத்திச் சென்று விருப்பமில்லாத சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கைது!

Last Updated : Aug 22, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details