தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2019, 7:58 PM IST

Updated : Dec 29, 2019, 7:41 AM IST

ETV Bharat / city

பொங்கலுக்கு தயாராகும் வெல்லம் - விலையை உயர்த்த தொழிலாளர்கள் கோரிக்கை!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் பொங்கலுக்கு தயாராகும் வெல்லம்
ஈரோட்டில் பொங்கலுக்கு தயாராகும் வெல்லம்


கடந்த பல ஆண்டுகளாகவே ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெல்ல தயாரிப்பு குடும்பத் தொழிலாகவும், குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவந்த இந்தத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்து சில நூறு பேர் ஈடுபட்டுவரும் தொழிலாக மாறி வருகிறது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டம் முழுவதும் பரவலாக 100 வெல்ல உற்பத்தியாளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தற்போது 30 உற்பத்தியாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடும் வீழ்ச்சிக்கு அதிகரித்துள்ள போலி வெல்லங்களின் விற்பனையும், வெல்லத்திற்கு கட்டுப்படியாகிற போதிய விலையும் கிடைப்பதில்லையென்பதே முக்கிய காரணங்களாக உள்ளது.

ஈரோட்டில் பொங்கலுக்கு தயாராகும் வெல்லம்

இது மட்டுமின்றி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு வெல்லம் தற்போதும் தொடர்ந்து அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வெல்ல உற்பத்தியில் பலருக்கும் ஆர்வமில்லாமல் தொழில் முடங்கிப்போனது. இயற்கை முறையில் கலப்படமின்றி தயாரிக்கப்படும் வெல்ல வகைகளுக்கு உரிய விலை கிடைத்திடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீண்டும் வெல்ல உற்பத்தி தொழில் தலை தூக்க வாய்ப்புள்ளதாக வெல்ல தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் கூறுகின்றனர்.

மேலும் வெல்ல உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைத்தால், அதனை நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நல்ல கூலி கிடைக்கும், இதனால் பல ஆண்டுகளாக ஒரே விலையில் நீடிக்கும் வெல்லத்திற்கு அதிக விலையை நிர்ணயித்திட வேண்டும் என்றும், பாரம்பரியமான வெல்லத் தொழிலை பாதுகாத்திடுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு இத்தொழில் அழியாமல் காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.


இதையும் படிங்க:

இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

Last Updated : Dec 29, 2019, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details