ஈரோடு: சாஸ்திரிநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, சூரம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப், கொல்லம்பாளையம் திரு.வி.க.வீதியைச் சேர்ந்த அய்யனார் என்பது தெரியவந்தது.
ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை... 2 பேர் கைது...
ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
Etv Bharat
அவர்களிடமிருந்து ஒரு கஞ்சா பாக்கெட்டும், 30 போதை மாத்திரைகளும், ஒரு போதை ஊசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவர்கள் 2 பேரும் போதை மாத்திரைகள், ஊசி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்த போலீசார் இவர்களுக்கு இவற்றை விநியோகம் செய்த அன்பு என்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகரின் கார் எரிப்பு வழக்கு - ஈரோட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது