தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2022, 6:12 PM IST

ETV Bharat / city

ஈரோடு அருகே தலைமுடிகளை திருடிச்சென்ற இருவர் கைது

ஈரோடு அருகே திண்டல் மாருதி கார்டனில் கத்தியைக்காட்டி மிரட்டி ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தலைமுடி மற்றும் மூன்று ஆண்ட்ராய்டுகளைப்பறித்து சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு:திண்டல் மாருதி கார்டனில் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடி, 3 மொபைல் போன்கள் பறித்துச்சென்ற வழக்கில் சென்னை அம்பத்தூரைச்சேர்ந்த பொன்முருகன், செங்குன்றத்தைச்சேர்ந்த பாபாமுருகன் ஆகிய இருவர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.

வடக்கு திண்டல் மாருதி கார்டனைச்சேர்ந்த சுதாகர் என்பவர் தலைமுடியை சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த ஜூன் 25ஆம் ஆம் தேதி கர்நாடகா மாநிலம், நஞ்சன்கூடு சிவன் கோயிலில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை நேரில் சென்று வியாபாரத்திற்காக வாங்கி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஜூலை 2ஆம் தேதி சுதாகரை மொபைலில் தொடர்பு கொண்ட ஒரு நபர், 35 கிலோ அளவுக்கு நீளமான முடி வேண்டும் என கேட்டுள்ளதாகத்தெரிகிறது. இதனையடுத்து போனில் வீட்டின் விலாசத்தைக் கேட்டு வில்லரசம்பட்டியிலுள்ள இவர்களது வீட்டிற்குள் சென்று கத்திமுனையில், வீட்டில் 7 மூட்டைகளில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடிகளையும் 2 சாம்சங், ஒரு ஹோனர் 7 எச் மொபைல் போன் என 3 மொபைல் போன்களையும் பறித்துச் சென்றனர்.

இதனால், செய்வதறியாத சுதாகர் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின்பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்ததில் சென்னை அம்பத்துார் எஸ்.வி.நகர் கோபால் தெருவைச் சேர்ந்த பொன் முருகன், செங்குன்றம் ரெட்ஹில்ஸ், காட்டு நாயக்கர் நகர் பாபாமுருகன் ஆகியோரை இன்று (ஆக.15) கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் மேலும் இருவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷேர்சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை ஏமாற்றும் மன்மதன்

ABOUT THE AUTHOR

...view details