ஈரோடு: அந்தியூர் அருகேயுள்ள கிணத்தடி விலாங்குட்டை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல் துறையினர் விளாங்குட்டை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருமாள், மதன் ஆகியோர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.