ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.
கொள்முதல் செய்யபடும் தக்காளிகள் லாரிகள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநிலப்பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகள் தக்காளியை விலை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்துள்ளது.