ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான சிறப்பு குழுவின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குநர் சம்பத்குமாரிடம் (செப்.5) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.