தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மகிளா காங்கிரஸின் மாநிலத் தலைவி சுதா ராமகிருஷ்ணன் சிறப்பு ழைப்பாளராகக் கலந்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யாத மத்திய அரசையும், நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குப் பெறாமல் தமிழக பெண் குழந்தைகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது - மகிளா காங். சுதா ராமகிருஷ்ணன்!
ஈரோடு: இந்தியாவில் ஒட்டுமொத்த பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியில் தினசரி இந்தியாவின் ஏதோ பகுதியில் பெண்ணோ அல்லது பெண் குழந்தைகளோ கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது என்றும் மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுதா ராமகிருஷ்ணன், இந்தியா பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நாடாக மாறி வருகிறது என்றும், தினசரி இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் பெண்ணோ அல்லது பெண் குழந்தையோ கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்தபின்னரும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையென்றும், தெலுங்கானா, காஷ்மீர், டெல்லி, உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளம்பெண்கள் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வருவதாகவும், உத்தரப்பிரதேசத்திற்கு சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லப்போன காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காவல் துறையினரால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.