2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம் குறித்து ஒரு பரிந்துரையை முன்மொழிந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகநாடுகள் பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்றன. இதையடுத்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாக அறிவித்து தீர்மானம் இயற்றியது.
அன்று முதல் வருடந்தோறும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் சர்வதேச யோகா தினத்தன்று யோகாசனங்களைச் செய்தும், யோகா குறித்து மக்களிடம் பேசியும் வருகிறார்.