ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் கொத்தமங்கலம், காராச்சிக்கொரை, புதுப்பீர்கடவு கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கொத்தமங்கலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள விவசாய தோட்டப் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தது.
காலை நேரத்தில் விவசாய விளைநிலத்தில் காட்டு யானைகள் நடமாடுவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.