ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேடு கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெரியார் நகர், எம்ஜிஆர் நகர், புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் 141 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் ஆகும். இந்த கட்டடம் மழையால் வலுவிழந்து மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுகின்றன. கான்கிரீட் கம்பிகள் எலும்புக்கூடு போல வெளியே தெரிகிறது.