ஈரோடு மாவட்டம் கங்காபுரம் குளத்துப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பிளாஸ்டிக் ஆலை முழு ஊரடங்கை பின்பற்றாமல் வழக்கம் போல் இயங்கியது பொதுமக்களுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் புகாரின் பேரில் காவல் துறையினர் வருவதை அறிந்த ஆலை நிர்வாகம் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நான்கு கண்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்றி வெளியேற்றினர்.
அந்த கண்டெய்னர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஒப்படைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், கண்டெய்னர் லாரி ஓடடுநர்கள் லாரியை நிறுத்தாமல் பொதுமக்களை மீறியும் எடுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கரோனா