தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் கொண்டாட்டங்கள் கோலாகலம்!

திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Pongal celebration
Pongal celebration

By

Published : Jan 14, 2020, 5:20 PM IST

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விளையாட்டு மைதானத்தில் இன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து ஆண், பெண் காவலர்களுக்கும் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவரது குடும்பத்துடன் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி விளையாட்டு மைதானத்தை சுற்றி வந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும், விதவிதமாக கோலங்கள் வரைந்தும் வண்ணமயமான பானைகளில் பொங்கல் வைத்தும், தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்தும், காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர். இவ்விழாவில் பல காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் காவல்துறை பொங்கல் கொண்டாட்டம்

இதேபோல ஈரோடு அடுத்துள்ள திண்டல் வேளாளர் கல்லூரியில் மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரியில் பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையில் பயிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி சேலையை அணிந்து, பல வண்ணக் கோலங்களை வரைந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஈரோடு கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

அதைத்தொடர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர். அதைத்தொடர்ந்து பொங்கல் பானையை சுற்றி, மாணவிகள் கும்மி போட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை - ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்

ABOUT THE AUTHOR

...view details