தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடமாநிலத்தவர் கடைகளுக்குப் பூட்டு: வெளியேறச் சொல்லி நோட்டீஸ்!

ஈரோடு: தமிழ்நாட்டை விட்டு வட மாநிலத்தவர்களை வெளியேறச் சொல்லி அவர்களின் கடைகளைப் பூட்டி, கதவுகளில் நோட்டீஸ் ஒட்டியவரை மாநகரக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

indians
indians

By

Published : Mar 11, 2020, 2:24 PM IST

Updated : Mar 11, 2020, 3:08 PM IST

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வட மாநிலத்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கக் கூடாது, தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் தேசியக் கட்சியினர் வட மாநிலத்தவரின் கடைகளைப் பூட்டுவோம், வட மாநிலத்தவரை விரட்டியடிப்போம் என்கிற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி ஈரோடு கடைவீதி பகுதிகளிலுள்ள மூன்று வட மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போடப்பட்டன. மேலும், பூட்டப்பட்ட கடைகளின் இரும்புக் கதவுகளின் மீது, வட மாநிலத்தவர்கள் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதால் தமிழர்களின் வியாபாரமும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதாகவும், வட மாநிலத்தவர் தாமாக வெளியேறாவிட்டால், விரட்டியடிப்போம் என்கிற பொருள்படும்படி நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடைகளுக்குப் பூட்டுப் போட்டு நோட்டீஸ் ஒட்டியவர்களை மாநகரக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், சித்தோட்டைச் சேர்ந்த வீரகுமார் என்பவர்தான் கடைகளைப் பூட்டி நோட்டீஸ்களை ஒட்டியது என்பது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் வீரகுமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு; வெளியேறச் சொல்லி நோட்டீஸ்!

இதையும் படிங்க: கோவையில் ஒரு அத்திப்பட்டி: 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடிகள்!

Last Updated : Mar 11, 2020, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details