தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாடாளுமன்றத்தின் முதுகெலும்புகளை முறிக்கிறார் மோடி - சுப்பராயன் எம்பி விமர்சனம்

பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை தொட்டு வணங்கும் மோடி பாராளுமன்றத்தின் முதுகெலும்பை முறித்து வருகிறார், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

மோடி பாராளுமன்றத்தின் முதுகெலும்புகளை முறித்து வருகிறார்- நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்
மோடி பாராளுமன்றத்தின் முதுகெலும்புகளை முறித்து வருகிறார்- நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்

By

Published : Sep 10, 2022, 6:06 PM IST

Updated : Sep 10, 2022, 6:23 PM IST

ஈரோடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்புராயன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”மோடி அரசின் 8 ஆண்டு சாதனைகள் என்பது சர்வமும் நாசம் என்றும் வரலாறு காணாத நெருக்கடியில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அனைத்துக்கும் பொதுமக்கள் தனியாரிடம் தான் போக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. கல்வியும், மருத்துவமும் பணத்திற்காக நடைபெற்று வருகிறது, நடுத்தர குடும்ப மக்கள் தனியார்மய கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாரதிய ஜனதாவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிக் கொள்வது நல்லது என்றும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவது நல்லது இல்லை.

மாநில ஆளுநர் அன்றாட நடவடிக்கைகள் என்பது ஆர் எஸ் எஸ் என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறார். ஆர் எஸ் எஸ் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கு ஆளுநருக்கு சம்பளம் தேவையில்லை, பொறுப்பான பதவி ஆளுநர் பதவி ஆனால், ஆர் என் ரவி அந்த பொறுப்புக்கு பொருத்தமற்றவர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரி பள்ளம் அணை 42 அடி உயரம் உள்ளது. இதில் 20 அடிக்கு வண்டல் மண், கிராவல் மண் படிந்துள்ளது. அணையின் நீர் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் தண்ணீர் வற்றிய பின்பு வண்டல் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பரந்தூர் எட்டு வழி சாலை திட்டத்தால் 4800 எக்கர் நிலம் 13 கிராமங்கள் பாதிக்கப்படுகிறதுமக்கள் விரோதமாக இருக்கும் திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்க காரணமே இந்தியாவின் சூழ்நிலை தான் காரணம். அதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது பொறுப்பை நிறைவேற்ற பொருத்தமற்ற ஒன்றாக இந்த நாடாளுமன்றம் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் இன் அரசியல் முகமாக இருக்கும் பாஜக, ஆர் எஸ் எஸ் இன் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.

பாஜக அரசால் நாடாளுமன்ற ஜனநாயக முறை மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும் ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பிற்கு ஜனநாயக நடைமுறை இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் ஜனநாயக முறையை ஏற்றுக் கொள்வதில்லை. பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பல்வேறு மாநில ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் தீங்கு விளைவிக்கும் என்று கூறும் ஆர்எஸ்எஸில் பயின்று வந்தவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி பாராளுமன்றத்தின் முதுகெலும்பை முறித்து வருகிறார். பழங்குடியின பெண் ஒருவரை இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கொண்டு வந்ததைப் போல ஒரு தோற்றத்தை மோடி காட்டுகிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன் எம்பி

தண்டகாரண்ய காடுகளில் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் மாவோயிஸ்டுகள் தானா. அங்கு 28 வகையான கனிம வளங்களை கொள்ளை அடிக்க சேட்டிலைட் மூலமாக கண்டு அறிந்து கொண்டு புதைந்து கிடக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது இந்த மத்திய அரசு.

தண்ட காரண்யா காடுகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களை உச்ச நீதிமன்றம் கூறியும் சட்டத்திற்குப் புறம்பாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பழங்குடியினர் மக்களை வெளியேற்றி கைப்பற்றியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்’ - அமைச்சர் பொன்முடி

Last Updated : Sep 10, 2022, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details