புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு 900 மடிக்கணினிகளை வழங்கினர்.
பள்ளிகளின் குடிநீர் தேவையை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் - ON SATHYAMANGALAM
ஈரோடு: மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் தனியார் பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என புஞ்சை புளியம்பட்டி அரசுப் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் குடிநீர் தேவையை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும்
இந்நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்:
- நீட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்பு, அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளக் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் ஆகிய திட்டங்களைப் பார்த்து உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் பாராட்டியுள்ளார்.
- இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு வாரங்களில் புதிய பாடத்திட்டப் புத்தகங்கள் வழங்கப்படும்.
- குவிக் ரெஸ்பான்ஸ் என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுவதற்கு 2000 சொற்கள் அடங்கிய புதிய மென்பொருள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- பள்ளி மாணவர்கள் ஒன்றரை கோடி மரங்கள் நடுவதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்காக ஒரு மரத்துக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- தனியார்ப் பள்ளி நிர்வாகிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
- ரூ.1654 கோடி செலவில் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் இப்பகுதி வறட்சி நீங்கி, பசுமையாக மாறும்.