தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை அரசே வழங்கும் - அமைச்சர் முத்துச்சாமி

கரும்பு விவசாயிகளிக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் முத்துச்சாமி
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி

By

Published : Nov 3, 2021, 12:28 PM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். விலையில்லா வீட்டு மனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை,சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை இயந்திரங்கள் வழங்குதல் என 335 பயனாளிகளுக்கு 3 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “விவசாயிகள் கோரிக்கை வைத்தால் ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதற்கான வளாகம் அமைப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி

நிலுவை தொகை

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த பகுதிகளில் பணிகள் தாமதமாகியுள்ளதோ அதை ஆய்வு செய்து விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எடுத்து வருகிறார்" என்றார்.

இதையும் படிங்க:ரவுடிகளை ஒடுக்க 'மகாகோ': அதிரடி காட்டும் புதுச்சேரி அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details