தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை - laid the foundation stone for nine new projects

ஈரோடு மாவட்டத்தில் 9 புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர்
புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர்

By

Published : Aug 21, 2021, 9:40 PM IST

ஈரோடு: சென்னிமலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தலைமையில், 80லட்சத்து 42ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று (ஆக 21) நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி 9 புதிய திட்டப்பணிகளுக்கும் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

  • சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குட்டப்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டுவலசு கிராமத்தில் 6லட்சத்து 63ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி.
  • குட்டப்பாளையம் சிவசக்தி அம்மன் மில் எதிரில் 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி.
  • குமாரவலசு ஊராட்சி உலகபுரம் கிராமத்தில் ஓலப்பாளையம் முதல் உலகபுரம் வரை 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கும் பணி.
  • சி.எஸ்.ஐ காலனி முதல் சிறுவங்காட்டு வலசு வரை 18லட்சத்து 29ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சாலைக்கு மெட்டல் அமைக்கும் பணி.
  • முகாசிபுலவன்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி.
  • முகாசிபுலவன் பாளையம் கிராமம் பாலாஜி கார்டன் 5ஆவது வீதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி.
  • ரோஜா நகர் முதல் வீதியில் 8லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி.
  • வேலவன் நகர் முதல் வீதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு கப்பி பரப்பி தார்சாலை அமைக்கும் பணி.
  • முகாசிபுலவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 99 எல்.ஈ.டி மின் விளக்கும் அமைக்கும் பணி

என மொத்தம் 80லட்சத்து 42ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து பூமி பூஜைகளிலும் கலந்துகொண்ட அமைச்சர், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர்

இந்நிகழ்ச்சிகளில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ உள்ளிட்ட பலர் இருந்தனர்.

இதையும் படிங்க:விரைவில் கரோனா டெல்டா வைரஸ் கண்டறியும் ஆய்வகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details