தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராமங்களில் வீடு வீடாக கட்டாய கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை தீவிரம்

கரோனா நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக, கொமாரபாளையம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார துறை தீவிரம்
சுகாதார துறை தீவிரம்

By

Published : Nov 13, 2021, 7:42 PM IST

ஈரோடு: கொமாரபாளையம் குமரன் நகரில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், உடல் வெப்பநிலை ஆகியவற்றை சுகாதாரத் துறையினர் பரிசோதித்தனர்.

அதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதின் அவசியத்தை எடுத்துக்கூறியதில், கர்ப்பிணிகள், இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் சுகாதாரத் துறையினர் முகக்கசவம் அணிதல், தகுந்த இடைவெளி குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலகம் சார்பில் தடுப்பூசி செலுத்தியவருக்குப் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:104 வயதிலும் தேர்வில் டாப்பர்: கோட்டயம் குட்டியம்மாவின் சாதனை

ABOUT THE AUTHOR

...view details