தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம்! - law advice

ஈரோடு: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு வழங்கும் தண்டனை குறித்து மாணவ மாணவிகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம்!

By

Published : Jun 14, 2019, 8:01 AM IST

ஈரோட்டில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழ சார்பில் திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கிடைக்கக் கூடிய சட்ட ஆலோசனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அதில் பெண்கள், குழந்தைகள் சட்டப் பணிகள் ஆணைக்குழுவினை அணுகினால் அவர்களுக்கு கட்டணமின்றி வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுத்தரும் வழிமுறைகளைப் பற்றி விளக்கினார்கள்.

பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம்!

பள்ளி பருவத்தில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு வழங்கக்கூடிய தண்டனை விவரங்களும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details