தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தல் பதில் சொல்லும் - எம்பி கனிமொழி - திமுக மகளிரணிச் செயலாளர் எம்பி கனிமொழி

ஈரோடு: ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தல் அதற்கான பதிலை சொல்லும் என திமுக மகளிரணிச் செயலாளர் எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

DMK MP Kanimozhi
DMK MP Kanimozhi

By

Published : Dec 3, 2020, 5:43 PM IST

விடியலை நோக்கி ஸ்டாலின் பயணம் குறித்த பரப்புரை பயணம் என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ சந்தையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி வருகையால் திமுகவின் வெற்றி பாதிக்காது, வாக்கு வங்கியை பாதிக்காது. நிச்சயமாக திமுக வெற்றி பெறும். எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

எம்பி கனிமொழி

மத்திய அரசின் இந்த துரோக செயலை எதிர்த்து பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும். மேலும், கமல் ஹாசன் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பதென்பது அவருடைய விருப்பம். ரஜினி லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தாலும் அதற்கான பதில் அரசியலில் தெரியும்” என்றார்.

இதையும் படிங்க: சிங்கம் களமிறங்கிடுச்சு: ஆறிலிருந்து அறுபது வரை காத்திருந்த ரசிகர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details