ஈரோடு:மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 104.50 அடியாகவும், நீர் இருப்பு 32.3 டிஎம்சி ஆகவும் உள்ளது.
அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் பவானி ஆற்றில் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று (டிச.1) 3 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை (டிச.2) அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 519 கன அடியாக அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து அணையிலிருந்து பவானி ஆற்றில் 7 ஆயிரத்து 600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடி நீரும் என மொத்தம் 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பேட்மிண்டன் வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படாதது ஏன்? - சு. வெங்கடேசன் கேள்வி