ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகிக்கும், பெருமாக்கவுண்டன் வலசை சேர்ந்த பொறியாளர் கமல்பிரசாத்திற்கும் 2020 நவம்பர் 26ஆம் தேதியில் திருமணம் நடைபெற்றது.
தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஏழு மாத கர்ப்பிணி செல்வநாயகி விஷம் அருந்தியுள்ளார்.
தற்கொலை முடிவு
விஷம் அருந்தி மயக்க நிலையில் இருந்த செல்வநாயகியை உறவினர்கள் மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மனைவி உயிரிழப்பு
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள் இதனை அறிந்த கமல்பிரசாத் சோகத்தில் தானும் விஷம் அருந்திவிட்டு கோவையிலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வேகமாக சென்றுள்ளார். தெக்கலூர் அருகே கார் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கமல்பிரசாத், சிகிச்சை பலனின்றி கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 'செல்ஃபி எடுக்கும்போது கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்'