தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - சுதி ஈமு கோழி நிறுவனம்

பெருந்துறையில் 2012ஆம் ஆண்டு சுதி ஈமூ கோழி நிறுவனம் நடத்தி, ரூ. 2.7 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டணையும், ரூ. 2.47 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான யுவராஜ் 'என் மீது எந்தக் குற்றமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு
ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு

By

Published : Aug 5, 2021, 8:13 PM IST

Updated : Aug 5, 2021, 10:22 PM IST

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுதி ஈமு கோழி நிறுவனத்தை தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் மாநிலத்தலைவரான யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

கோவை முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு:

இந்த நிறுவனத்தில் முதலீடுசெய்த 121 பேரிடம் ரூ. 2 கோடியே, 70 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பழனிசாமி என்பவர் கொடுத்தப் புகாரின்பேரில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை, மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவுசெய்து கைது செய்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை கோவையிலுள்ள முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வாசு, தமிழ்நேசன், யுவராஜ்

இந்த வழக்கில் இன்று (ஆக. 05) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீரன் சின்னமலை பேரவை மாநிலத் தலைவர் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டணையும், ரூ. 2.47 கோடி அபராதமும் விதித்து முதலீட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ரவி தீர்ப்பு வழங்கினார்.

இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவருக்குப் பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், யுவராஜ் என்பவர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கோகுல்ராஜ் என்பவரை ஆணவக்கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் மாநிலத்தலைவர் யுவராஜ்

நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையினர் யுவராஜை அழைத்துச் செல்லும்பொழுது "நான் முதலாளியும் அல்ல. பங்குதாரரும் அல்ல. அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இவ்வாறு செய்துள்ளார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போகிறேன். என் மீது எந்தக் குற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: '48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் 50% வரியைக் கட்டவேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி'

Last Updated : Aug 5, 2021, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details