ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 17% சதவிகிதம் வரை உயர்த்தப்பட உத்தேசித்துள்ளதாக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை உடனடியாக அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த நாட்களில் மின் மிகை மாநிலமாக இருந்ததை, தற்பொழுது பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படும் மாநிலமாக மின்சார வாரியம் ஏற்படுத்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் பயன அளவீடு செய்யப்படும் என்று கூறியிருந்தது.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முறையாக நிறைவேற்றாத திமுக அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்த நினைப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். அரசு சில மாதங்களுக்கு முன்னர் வீட்டு வரி மற்றும் சொத்து வரியை உயர்த்தியது. தற்பொழுது மின் கட்டணத்தையும், ஆவின் பொருட்களின் விலை உயர்வை அறிவித்து மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றுகிறது.
இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கும் உயர்த்தப்பட உள்ள விலை ஏற்றங்களையும், மின் கட்டண உயர்வையும் அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை