ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், நேற்று (பிப்ரவரி 2) அதிகாலை பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில், குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளா நோக்கிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், காரில் வந்த ஐந்து நபர்களிடம் ரூ.51,000 பணம், நகைகள் இருந்தன. பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், “திருநெல்வேலி அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த சமீர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், முகமது இஸ்மாயில், ஷாஜகான், சுபேர் என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து கவரிங் நகைகள் வாங்கிச் செல்வதாகக் கூறியுள்ளனர்.