தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோயில். இங்கு, தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். தற்போது இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், நாளை அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் 10 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் தரிசனம் ரத்து: பண்ணாரியம்மன் கோயில் நிர்வாகம் - அமாவாசையை ஒட்டி பக்தர்கள் தரிசனம் ரத்து
ஈரோடு: அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் நாளை (அக்டோபர் 16) பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Devotees' darshan canceled due to amavasai
இதனால், நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக பண்ணாரி அம்மன் கோயிலில் நாளை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், கோயிலில் வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வெளியே அம்மனை தரிசித்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
ஈரோடு மாவட்ட செய்திகள்