ஈரோடு:உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஈரோடு பழைய ரயில் நிலையம் அருகே, கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும், பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்புத் தனிச் சட்டத்தை நடைமுறை படுத்திட வேண்டும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்கி தண்டனைகளை நிறைவேற்றுவதற்குரிய சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.