தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் எரிப்பு... ஈரோட்டில் பரபரப்பு... - பாஜக நிர்வாகியின் கார் தீ வைத்து எரிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு
பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு

By

Published : Sep 24, 2022, 3:00 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி எஸ்ஆர்டி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசேகர். அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர பொருளாளராவார்.

அவருக்கு சொந்தமான மூன்று கார்களை தனது வீட்டில் முன்புறம் நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு (செப்.23) அதிகாலை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு சிவசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. முன்னதாக கோவையில் பாஜக அலுவலம் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக மேற்கு மண்டல தலைவரின் கார், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு...

ABOUT THE AUTHOR

...view details