தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு! - Perundurai police are investigating

ஈரோடு: நள்ளிரவில் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

By

Published : Sep 25, 2019, 2:19 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓமலூரைச் சேர்ந்த நடத்துநர் உதயகுமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த நடத்துநர் உதயகுமார்

மேலும் பெங்களூரை சார்ந்த பிரேமா (16) அவரது தாயார் மகேஸ்வரி (36) இருவரும் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

அவரது தாயார் மகேஸ்வரி மேல் சிகிச்சைக்காக கோவை சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநர் சின்னராஜ் (51), பயணிகள் வேலுச்சாமி (29), மனோஜ் (27) ஆகிய மூவரும் ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details