கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 968 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” அதிமுக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் அரசாகவும், ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் அரசாகவும் திகழ்கிறது.
’அரசின் வேகத்தை பார்த்து அஞ்சுகின்றனர்’ - 405 மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றிய அரசாக உள்ளது
ஈரோடு: தமிழக அரசின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
sengottaiyan
7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேரின் மருத்துவக்கனவை நிறைவேற்றிய அரசு இந்த அரசு. இதற்காக 16 கோடி ரூபாயை ஒதுக்கி, வேறு எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: கால்நடைத்துறையில் காலி பணியிட போலி விளம்பரம்; நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்