பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம், குறைந்த விலையில் வெங்காய விற்பனை செய்யும் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - செங்கோட்டையன்
ஈரோடு: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
sengottaiyan
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாவது முறையாக மீண்டும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 12 ஆம் வகுப்பு முடித்த 9,438 பேர் இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு பிரச்னை; மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் பேட்டி!