ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாசப்பகவுண்டர்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 35 வயதாகிவிட்டதால் புரோக்கர் மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது புரோக்கர்கள் விருதுநகரைச் சேர்ந்த சரிதா என்பவர் பரிந்துரைத்துள்ளனர். அப்போது சரிதா தாய், தந்தையை இழந்தாகவும், பெரியம்மா விஜயலட்சுமி வளர்ப்பில் வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதனிடையே திருமணத்திற்கு கமிஷனாக ரூ.2 லட்சம் புரோக்கருக்கு தரவேண்டும் என்று விஜயலட்சுமி கூறியதால் சரவணனும் கொடுத்துள்ளார். அதன்பின் இருவருக்கும் திருமணமானது. அதைத்தொடர்ந்து 10 நாள்களாக சரிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அவரது செல்போனை சரவணன் சோதனையிட்டார். அப்போது ஒரு வாய்ஸ் மெசேஜ் இருந்துள்ளது. அதில்விஜயலட்சுமி, சரிதா, புரோக்கர்மூவரும் சேர்ந்து இதேபோல்திருமணம் என்ற பெயரில் பணம் பறித்துள்ளது தெரியவந்ததுள்ளது.