ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் சத்தியமங்கலம் புதுக்கொத்துக்காடு பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால், வாழை மரங்கள் அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள 4,500 வாழை மரங்கள் நீரில் மூழ்கின.