ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தமிழ்நாடு - கர்நாடக எல்லையின் அருகே உள்ள தாசனயூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட ரெட்டி. இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் மண் வாரும் பணி செய்து கொண்டிருக்கும்போது இரையைத் தேடி வந்த மலைப்பாம்பு ஒன்று அங்குள்ள புதரின் உள்ளே படுத்துக் கொண்டுருந்தது. இதைக்கண்ட அவர் அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மலைப்பாம்பை பிடித்து வரும் வனத்துறையினர் பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை சாதுரியமாக பிடித்தனர். இந்த மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளமும் 60 கிலோ எடையும் கொண்டது. இந்த பாம்பை பிடிப்பதற்கு உதவிய பாம்புபிடி வீரர் மகேஷ், இதுவரை 100க்கும் மேற்பட்ட பாம்பை பிடித்துள்ளார்.
ஆனால் இதுவரை இவ்வளவு பெரிய மலைப்பாம்பை பிடித்தது இல்லை என தெரிவித்தார். பிடிபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியான மாதேஷ்வரன் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.