கோவை: ஜனவரி 10ஆம் தேதி, இரவு ஆலந்துறை சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் மணி என்பவரது வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் அங்கு திருட முயன்றதாக கூறி மணியின் மகன் விஸ்வநாதன், மருமகன் சம்பத்குமார் ஆகியோர் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கட்டி வைத்துள்ளனர்.
மாயம்
இதையடுத்து அவர்கள் ஆலந்துறை காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை பிடிபட்ட நபர் குடிபோதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் படி கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால், காயங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வட மாநில இளைஞர் மறுநாள் காலையில் மாயமானார்.
சடலமாக மீட்பு
பின்னர் ஆலந்துறை அருகே சித்திரைச் சாவடி அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறை, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடமாநில இளைஞர் கொலை - 10 பேர் கைது இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அணையில் சடலமாக மீட்கப்பட்டவர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்ததுள்ளது.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து விஸ்வநாதன், சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் தாக்கியதில் தான் அந்த நபர் உயிரிழந்ததும், இதையடுத்து அவரின் உடலை சித்திரைச் சாவடி அணையில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!