கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யப்பிரியா(20). இவருக்கு வெகு நாட்களாக மாதவிடாய் பிரச்னை இருந்துள்ளது. சிகிச்சைகாக செல்வபுரம் பகுதியில் உள்ள சித்த வைத்தியர் சிவகுருநாதன் என்பவரிடம் சத்தியப்பிரியா கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார்.
தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு; குடும்பத்தினர் முற்றுகைப் போராட்டம் - road rokko
கோவை: தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்ததாகவும் மருத்துவரை கைது செய்யக்கோரியும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிகிச்சையின்போது அளிக்கப்பட்ட மருந்துகளால் மாணவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் கடந்த மாதத்தில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சத்தியப்பிரியா குடும்பத்தினர் தவறான சிகிச்சை அளித்த சித்த வைத்தியரை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சத்தியப்பிரியா உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமான சித்த வைத்தியரை கைது செய்யக்கோரியும், புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் வழக்குப் பதிவு செய்யாத செல்வபுரம் காவல்நிலைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.