தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணம் தாண்டிய உறவில் இருந்தவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை!

கோவை: திருமணம் தாண்டிய உறவில் இருந்தவர் விபத்தில் இறந்த சோகம் தங்காமல் பெண் விஷம் குடித்து தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Suicide
Suicide

By

Published : Nov 19, 2020, 10:18 AM IST

கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையம் திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் துரைக் கண்ணன்(29). இவர், நேற்று முன் தினம் (நவ.17) தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சூலூர் சிந்தாமணி புதூர் அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (நவ.18) பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து உடற்கூராய்வுக்குப் பிறகு கண்ணம்பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர். இந்தநிலையில், துரைக்கண்ணுவை அடக்கம் செய்துவிட்டு, குடும்பத்தினர் வீடு திரும்பிய நிலையில் துரைக்கண்ணன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜெகஜோதி(45) என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று துரைக்கண்ணுவைப் பார்க்க வேண்டுமென்று மூடிய குழியை தோண்டி உள்ளார்.

இதுகுறித்து தகவலின் பேரில் துரைக்கண்ணன் குடும்பத்தினர் சுடுகாட்டிற்குச் சென்று ஜெகஜோதி எச்சரித்துவிட்டு குழியை மீண்டும் மூடி விட்டு வந்தனர். இந்நிலையில் ஜெகஜோதி பாப்பம்பட்டி பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில் மதுவில் சானி பவுடரை கலந்து குடித்துவிட்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜெகஜோதி உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட ஜெகஜோதிக்கு திருமணமாகி முருகன் என்ற கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெகஜோதிக்கும் துரைக்கண்ணனுக்கு கடந்த சில நாள்களாக திருமணம் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details