தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுவனின் இருதய சிகிச்சைக்காக நிதி திரட்டும் கிராமம்! - etvtamil

கோவையில் 13 வயது சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

13 வயது சிறுவனை இருதய மாற்று சிகிச்சைக்கு நிதி திரட்டி வரும் கிராம மக்கள்
13 வயது சிறுவனை இருதய மாற்று சிகிச்சைக்கு நிதி திரட்டி வரும் கிராம மக்கள்

By

Published : Jul 30, 2021, 12:17 PM IST

Updated : Jul 30, 2021, 4:28 PM IST

கோவை: மதுக்கரை பகுதி குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது இளைய மகன் பிரித்திவ் ராஜ் (13). இருதய செயலிழப்பு காரணமாக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராம மக்களின் ஒற்றுமை

அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நடைபெறாத நிலையிலேயே ரூ. 10 லட்சத்திற்கும் மேல் மருத்துவத்திற்கு செலவாகியுள்ளது.

சிறுவனின் இருதய சிகிச்சைக்காக நிதி திரட்டும் கிராமம்!

இந்நிலையில் மேலும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் நிலையை அறிந்த ஊரிலுள்ள இளைஞர்கள் உள்பட பலரும் இணைந்து மக்களிடம் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் வீடுவீடாகச் சென்றும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்தத் தகவலை பகிர்ந்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு உதவினால்..

இது குறித்து பேசிய சிறுவனின் தந்தை, "இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 25 லட்சம் பணம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே ரூ. 10 லட்சம்வரை செலவாகியுள்ள நிலையில், தனியார் அமைப்புகள் மூலம் உதவி அணுகி வருகிறோம்.

முதலமைச்சர், பிரதம மந்திரி திட்டத்தின்கீழும் உதவி கேட்டு வருகிறோம். எனவே, அரசு உதவினால் மிகவும் நன்மையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

நிதி திரட்டும் பணி

அதற்கு முன்னதாக பேசிய ஊர் மக்களில் ஒருவரான செந்தில்குமார் கூறுகையில், "பிரித்திவ் ராஜின் அறுவை சிகிச்சைக்காக எங்கள் ஊர் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி வருகிறோம். இதற்கு அனைவரும் முன்வந்து உதவவேண்டும்.

பணம் தர இயலாவிட்டாலும் இந்தத் தகவலை தெரிந்தவர்களுக்கு பகிர்வதன்மூலம் ஏதேனும் உதவிகள் கிடைக்கப்பெறும்" என்றார்.

இதையும் படிங்க: 'பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் - மக்கள் குற்றச்சாட்டு'

Last Updated : Jul 30, 2021, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details