கோவை:அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 ஆவது கோவை மாவட்ட மாநாடு மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் (ஜூன்21) அதன் மாவட்ட தலைவர் வனஜா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா உரையாற்றினார். இம்மாநாட்டில், பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,
- ரேசன் கடைகளில் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உள் விசாரணை கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள துப்புரவு பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
- கோவை மாநகராட்சி சூயஸ் என்னும் வெளிநாட்டு தனியார் நிறுவனத்துடனான குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
- காவல் நிலையங்களில் புகார் அளிக்கவரும் பெண்களை அலைக்கழிப்பு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக சி.ஜோதிமணி, செயலாளராக டி.சுதா, பொருளாளராக உஷா மற்றும் துணை தலைவர்களாக ராஜலட்சுமி, தங்கமணி, சாமுண்டீஸ்வரி, அ.ராதிகா, ஆர்.வனஜா ஆகியோரும், துணை செயலாளர்களாக சாந்தா, மெகபு நிஷா, அமுதா, ரேவதி, ஜீவாமணி ஆகியோர் உட்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.