கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்குள்பட்ட குரங்கு அருவி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தொடர் மூன்று நாள் விடுமுறை காரணமாக வால்பாறைக்குச் செல்ல தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் சோதனைச்சாவடி வழியாக வந்தனர்.
அதில் நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் முன்னேற்பாடாக வனத் துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.