சென்னை:Tamilnadu School Public Exams on May:பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது "பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்வது குறித்தும் பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் புகார் பெட்டி
மேலும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புகார் பெட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கல்வித் தகவல் உதவி மையத்தின் 14417 என்ற எண்ணில் பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.
பள்ளிக்கட்டடங்களில் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது 1600 கட்டிடங்கள் இடிக்க வேண்டும் என தெரியவந்துள்ளது, அந்தக் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடங்களை இடிக்கும் போது கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை விரைந்து இடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இடிக்கப்படும் பள்ளி கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் நிதி நிலைக்கு ஏற்ப அமைத்து தரப்படும்.பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும்போது அதன் உறுதித்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் பொதுத்தேர்வு