கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 31) கோவை வந்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்ற ஸ்டாலின் - Singanallur constituency DMK candidate Karthik
கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபயணமாகச் சென்று தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவு திரட்டினார். இன்று கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் பொதுமக்கள் பலரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தார்.