தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அங்கோடா லொக்கா வழக்கு: சிவகாமசுந்தரியின் பிணை மனு தள்ளுபடி! - Srilankan Don Angoda Lokka

கோயம்புத்தூர்: அங்கோடா லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகாமசுந்தரியின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

sivakamasundari-bail-plea
sivakamasundari-bail-plea

By

Published : Aug 24, 2020, 1:10 PM IST

இலங்கையைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா மரணம் தொடர்பாக அமானி தான் ஜி, சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த வழக்கு கோயம்புத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவியல் தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சிவகாமசுந்தரி தனக்கு பிணை கேட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவிசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி சிவகாமசுந்தரியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அங்கோடா லொக்கா வழக்கு விசாரணை: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details