பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ்-வனிதாமணி. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்ற நிலையில், 4 மகன்கள், ஒரு மகள் என 5 குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான வனிதாமணி, 5 மாதமான கருவை கலைத்துவிட முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து, ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.
கருக்கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்: தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் கைது! - கருக்கலைப்பு
கோவை: பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் முத்துலட்சுமி இன்று கைது செய்யப்பட்டார்.
மறுநாள், மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு வடசித்தூரில் தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வனிதாமணியை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும்போது, பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து முத்துலட்சுமி தலைமறைவானார்.
இதுகுறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலி மருத்துவர் முத்துலட்சுமி நாகப்பட்டினம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.