தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகளை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது - Pollachi issue

கோவை: பொள்ளாச்சியில் 13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Police station
Police station

By

Published : Jun 2, 2021, 6:15 AM IST

பொள்ளாச்சி நகர்ப்புறப் பகுதியில் கட்டடத் தொழிலாளி ஒருவர் கடந்த சில மாதங்களாக தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்ததை அறிந்த அச்சிறுமியின் மனைவி கணவரை கண்டித்ததுடன் மகளை கூட்டிக்கொண்டு இரண்டு மாதமாகத் தனியே வசித்துவந்தார்.

இந்நிலையில் கட்டடத் தொழிலாளி அவரது மனைவிக்கும் மகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது, கட்டடத் தொழிலாளி அவரது மகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைதுசெய்து கோவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details