பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய கும்பல் சமீபத்தில் கைதாகியது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்; திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் திருநாவுக்கரசுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை மார்ச் 15ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று மாலை வரை அவகாசம் இருந்தும் அவரை நீதிபதியின் வீட்டில் காவல் துறையினர் இன்று ஆஜர்படுத்தினர்.
அதனையடுத்து திருநாவுக்கரசுக்கு நாளை வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் திருநாவுக்கரசு மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ இரண்டாவது முறையாக நேற்று சோதனை நடத்தியது.