கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கௌசிக் என்பவரது தோட்டத்தில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீசார், 11 லட்சத்து 64 ரூபாய், தங்க மோதிரங்கள், சொகுசு கார்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய தோட்ட உரிமையாளர் கௌஷிக்கை நெகமம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.